வைகையில் விழித்து
வாசலில் நீர் தெளித்து
புள்ளிகளை இணைத்து
புதுக் கவிதை வடித்து
அவசரமாய் நீராடி,
அடுப்படியில் போராடி
பிஞ்சுகளை நீராட்டி
பிரியமுடன் சோறூட்டி
அத்தானோ(டு) அவசரத்தில்
அலுவலகம் அனுப்பிவைத்து
பிள்ளை நிலாக்களைப்
பள்ளிதனில் பயலவிட்டு
ஒரு பணியின் முடிவுரையில்
மறு பணியின் முகவுரையை
இணை தெழுதும்,
அஞ்சு நாள் வாரத்தில்
அலுவலக நேரத்தில்
சென்னை மாநகரத்தில்
அன்னைமார் நரகத்தில்
அதிகாரி அதிகாரம்
அவர் பேச்சு அதி-காரம்
பெருங்கோப்பெண்டு இனம்
பெருங்கோப்பு பெண்டிராகும்
அஞ்சடிக்கும் வேளை வரை
நெஞ்சொடியும் மாலை வரை
மறுபடியும் காலை வரும்
மறுநாளும் வேலை வரும்
தப்படியே இல்லாமல்
இப்படியே இவர் வாழ்க்கை.
பணிபுரியும் பாவையராம்
பெண் இனத்தின் பின்னனியில்
விரிந்திருக்கும் இன்னலினை
புரிந்திடுவீர், திருந்திடுவீர்
ராமசாமி
SIM செய்திமடல்
மார்ச் 1987
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக