சனி, 31 ஜனவரி, 2009

காக்காய் பிடித்தல்

"காக்காய்பிடித்தல்" என்று தமிழிலில் ஒரு தொடர் உண்டு.இதற்கு காக்கா பிடித்தல்"என்று பொருள் அல்ல.யாரவது ஒருவரை எப்படியாவது ஏமாற்றி நம் வசப்படுதிக் கொள்ளுவதை "காக்கா பிடித்தல்" என்கிறோம்.
"கால்கை பிடித்தல்" என்பதே திருமாறி உருமாறி "காக்கா பிடித்தல்" என்றாகிவிட்டது.காரியம்ஆக வேண்டுமானால் கால்கையை பிடித்து சமாதானப் படுத்துதல் என்று எல்லாப் பேச்சுவழக்கிலும் இருக்கிறது."கழுதையானாலும் காரியம் ஆக காலைப்பிடி"என்று பழமொழி உண்டு.
கால் கையைப் பிடித்து ஒருவரிடமிருந்து காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் செயலே பிற்காலத்தில் "காக்காய் பிடித்தல்"என்றா கிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக